ஆனால் சீமான் என்ன தான் விஜயை நேரடியாக தாக்கி பேசினாலும் விஜய் தரப்பில் இருந்து எந்தவிதமான எதிர்ப்பும் வரவேயில்லை என்று தான் கூறவேண்டும். அதே போல அரசியலில் விஜய் களமிறங்கியபோது அவரை பெரிய அளவில் வரவேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனும், விஜயின் மாநாட்டிற்கு பிறகு பெரிய அளவில் அவரை எதிர்க்க துவங்கினார். பாசிசம், பாயாசம் என்று யாரை அவர் இப்படி பேசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் கட்சியின் கொள்கைகள் ஏற்புடையதாகயில்லை என்றெல்லாம் பேசினார் திருமாவளவன்.